300 முதலைகளை துரத்தி துரத்தி கொன்று தள்ளிய கிராம மக்கள்: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் ஒரு கிராமமே ஒன்றிணைந்து அங்குள்ள முதலைகளை மொத்தமாக கொன்றொடுக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் சொராங் கிராமத்தில் டோஃபு தொழிற்சாலையில் அப்பகுதி நபர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.

அவர் சனிக்கிழமை அன்று தமது வளர்ப்பு மிருங்கங்களுக்கு உணவு அளித்து வந்தபோது திடீரென்று ஒரு முதலை தாக்கியுள்ளது.

அதிடம் இருந்து தப்பித்துக் கொள்ள உரத்த குரலில் கத்தியுள்ளார். அவரது குரல் கேட்டு கிராம மக்கள் சம்பவப்பகுதிக்கு விரையும் முன்னரே அந்த நபர் முதலையால் கொல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது சடலத்தை மீட்டு இறுதிச்சடங்கு நடத்திய கிராம மக்கள் சுமார் 600 பேர் சபதம் ஒன்றை உடனடியாக எடுத்துள்ளனர்.

இதனையடுத்து அருகாமையில் உள்ள முதலைகள் ப்ண்ணைக்குள் நுழைந்த கிராம மக்கள் சுமார் 292 முதலைகள் மற்றும் அதன் குட்டிகளை கொன்று தள்ளியுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த 40 பொலிசார் குறித்த கும்பலை தடுக்க முயற்சிகள் முன்னெடுத்தனர்.

ஆனால் பொலிசாரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அந்த கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

சட்டப்பூர்வமாக செயல்பட்டு வந்த ஒரு பண்னையில் புகுந்து அங்குள்ள முதலைகள் அனைத்தையும் கொன்றொடுக்கியது சட்டப்படி குற்றம் என தெரிவித்துள்ள பொலிசார், இதுவரை நான்கு பேரை விசாரித்துள்ளதாகவும் ஆனால் கைது நடவடிக்கை ஏதும் நடைபெறவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...