உலக ரசிகர்களை கவர்ந்த குரேஷியா ஜனாதிபதி: ஊழலில் சிக்கிய கணவர்! சர்ச்சை விவகாரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

முறைகேட்டில் சிக்கிய கணவரை குரேஷியா நாட்டின் ஜனாதிபதி கொலிண்டா கிராபர் சாமர்த்தியமாக காப்பாற்றியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் உலக கிண்ண கால்பந்து தொடர் அரையிறுதிக்கு எட்டிய நிலையிலேயே தென்கிழக்கு ஐரோப்பா நாடான குரேஷியா குறித்து பலரும் வியந்து பேசத்துவங்கினர்.

தற்போது இறுதிப்போட்டியில் பிரான்ஸ் கால்பந்து அணியுடன் மோதி இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது குரோஷியா.

இந்த நிலையில் குட்டி நாடான குரேஷியாவின் முதல் பெண் ஜனாதிபதி குறித்தும் அவரது கணவரின் ஊழல் குறித்தும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு குரேஷியாவின் 4-வது ஜனாதிபதியாக கொலிண்டா கிராபர் பொறுப்பேற்றார்.

அமெரிக்காவில் கல்விக்காலத்தை நிறைவு செய்த கொலிண்டா, தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான குரேஷியா நாட்டின் தூதுவராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் தான் கொலிண்டாவின் கணவர் ஊழலில் சிக்கியதாக பரபரப்பாக பேசப்பட்டது.

அமெரிக்காவுக்கான தூதுவராக செயல்பட்ட கொலிண்டாவுக்கு அதிகாரப்பூர்வ வாகனம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

குறித்த வாகனத்தை அவரது கணவர் சொந்த தேவைகளுக்காக அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதாகவும், இதனால் பெருந்தொகை இழப்பு ஏற்பட்டதாகவும், இது உண்மையில் முறைகேடு எனவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் குறித்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்த கொலிண்டா, தாம் வெறும் அரசாங்க ஊழியர் அல்ல எனவும், நாட்டின் மீதும் நாட்டின் எதிர்காலம் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர் எனவும், அதனால் 24 மணி நேரமும் பணி செய்து வருகிறேன் என வாதிட்டுள்ளார்.

ஆனால் கொலிண்டாவின் வாதங்கள் எதுவும் எடுபடாத நிலையில், அரசாங்க வாகனத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதற்கான மொத்த தொகையையும் கொலிண்டா செலுத்தியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னரே இந்த முறைகேடு விவகாரம் அடங்கியது எனவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...