உலகக்கோப்பை கால்பந்து போட்டியால் ரஷ்யா ஈட்டிய லாபம் எத்தனை பில்லியன்? குவிந்த 3 மில்லியன் மக்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வது பெடரேஷன் இன்டர்நேஷனல் டி ஃபுட்பால் அசோசியேஷன் (பிகா) ஆகும்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு பல்வேறு நாடுகளிடையே கடுமையான போட்டி இருக்கும். ஏனெனில் இந்த போட்டியை நடத்தும் நாடுகளுக்கு பணமழை கொட்டும்.

போட்டியை பார்ப்பதற்காக வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருவதால், தங்கும் ஹொட்டல்கள் முதற்கொண்டு உணவு, மதுபானங்கள் என அனைத்தும் அமோகமாக விற்பனை செய்யப்படும்.

இந்த ஆண்டு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்த போட்டியை பார்ப்பதற்காக உலக நாடுகளில் இருந்து 3 மில்லியன் மக்கள் குவிந்துள்ளனர் என மாஸ்கோ விளையாட்டு மற்றும் சுற்றுலா துறை தலைவர் Nikolai Gulyaev தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டியை பார்ப்பதற்கு மட்டும் Moscow’s Luzhniki Stadium - இல் 87,011 மக்கள் வந்திருந்துள்ளனர்.

ரஷ்யாவின் 11 நகரங்களில் அதிக சுற்றுலா பயணிகள் முகாமிட்டிருந்தனர். கால்பந்து உலகக்கோப்பை போட்டி ஏற்பாடுகளுக்காக ரஷ்யா சுமார்10.1 பில்லியன் டொலர்களை செலவு செய்திருக்கிறது. அது எதிர்பார்க்கும் லாபம் 30 பில்லியன் டொலர் ஆகும்.

உலகக் கோப்பையின் முதல் இரண்டு வாரங்களில் மது பானங்கள் மற்றும் தின்பண்டங்களின் விலை அதிகரிக்கப்பட்டது. ஆனால் அதிகமாக சுற்றுலாபயணிகள் பீர் வாங்குவதில் ஆர்வம் காட்டாத காரணத்தால் அதன் விற்பனை அதிகரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...