விசாவுக்காக 15 வயது சிறுமியை தவறாக பயன்படுத்திய புலம்பெயர்ந்த நபருக்கு சிறை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் டெக்ஸால் மாநிலத்தில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்துள்ள நபர் ஒருவர் 15 வயது சிறுமியை தவறாக பயன்படுத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Jose Nahun Lopez-Cruz (24) என்ற நபரை Dallas இல் வைத்து பொலிசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது பையில் கஞ்சா பொருட்கள் கிடந்துள்ளன.

அதுமட்டுமின்றி, அமெரிக்காவை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் வாழ்க்கை நடத்தியுள்ளார். 17 வயது பூர்த்தியாகாத சிறுமியை இவ்வாறு பாலியல் ரீதியாக தொடர்பு வைத்திருப்பது குற்றமாகும். எனவே, அவர் மீது குழந்தைகள் பாலியல் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், அச்சிறுமி விரைவில் 16 வயதை அடைந்துவிடுவாள் என ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தை இந்நபர் விளக்கமாக அளித்துள்ளார்.

சிறுமியை திருமணம் செய்துகொண்டு விசா பெற்றுக்கொள்வதற்காக இவர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார் என பொலிசார் சந்தேகம் கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து போதைப்பொருள் விவகாரம் மற்றும் சிறுமியை பாலியல் ரீதியாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது.

ஜாமீனில் வரவேண்டுமென்றால் இவர், 25,500 டொலர் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...