எழுந்து வா காதலியே! இறுதிச்சடங்கில் சடலத்தை மணந்த காதலன்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உயிரிழந்த காதலியின் சடலத்தை கனத்த இதயத்தோடு திருமணம் செய்து கொண்ட காதலனின் செயல் நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த ஒரு இளம் ஜோடி உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனது.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் காதலி திடீரென உயிரிழந்தார்.

இதையடுத்து சடலமாக கிடந்த தனது காதலியை திருமணம் செய்ய காதலன் கனத்த இதயத்துடன் முடிவெடுத்தார்.

அதன்படி சவப்பெட்டியில் சிவப்பு நிற புத்தாடை உடுத்தப்பட்டு காதலி படுக்க வைக்கப்பட்டிருந்தார்.

மணமகன் வெள்ளை நிற ஆடையில் இருந்தார். இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சடலமாக கிடந்த காதலியை காதலன் திருமணம் செய்து கொண்டார்.

அப்போது காதலன் நெகிழ்ச்சியுடன் எழுந்து வா காதலியே என கூறியது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers