சிறு வயதில் மது அருந்திய குற்றத்திற்காக இளைஞருக்கு கொடூர தண்டனை வழங்கிய நீதிமன்றம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரான் நாட்டில் இளைஞர் ஒருவர் தனது சிறு வயதில் மது அருந்திய குற்றத்திற்காக பொது இடத்தில் சவுக்கடி தண்டனைக்கு அங்குள்ள ஷரியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரானின் கஷ்மார் பகுதியில் உள்ள சதுக்கம் ஒன்றில் குறித்த இளைஞரை மரத்தில் கட்டிவைத்து சவுக்கால் அடித்துள்ளனர்.

கஷ்மார் பகுதியில் குடியிருந்து வருபவர் எம்.ஆர் என மட்டும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ள அந்த இளைஞர்.

இவர் தமக்கு 14 வயது இருக்கும் போது திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது நடந்த கொண்டாட்டத்தின்போது மது அருந்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த திருமண விழாவில் ஏற்பட்ட வாக்குவாதமானது 17 வயது இளைஞர் ஒருவர் கொலைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது 25 வயதான எம்.ஆர் என்ற இளைஞருக்கு சிறு வயதில் மது அருந்தியதாக கூறி 80 சவுக்கடி தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி கஷ்மார் பகுதியில் அமைந்துள்ள சதுக்கம் ஒன்றில் குறித்த இளைஞரை மரத்தில் கட்டிவைத்து 80 சவுக்கடி தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

ஈரானின் உள்ளூர் ஊடகங்கள் குறித்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர். 14 வயது சிறுவன் திருமண விழா கொண்டாட்டத்தின்போது மது அருந்தியதாக கூறி, அவரது 25 வயதில் தண்டனை வழங்கியுள்ளதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...