பறக்கும் விமானத்தில் பயணிகளிடம் பிச்சையெடுத்த பிச்சைக்காரர்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கட்டார் விமானம் பறந்து கொண்டிருந்த போது உள்ளிருந்த பிச்சைக்காரர் சக பயணிகளிடம் பிச்சையெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோஹாவிலிருந்து சிராஜ் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த போது இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென எழுந்தார்.

பின்னர் தன்னிடமிருந்த பிளாஸ்டிக் பையை சகபயணிகள் முன்னர் நீட்டி பணம் தரும்படி கூறி பிச்சையெடுதார்.

இதையடுத்து சில பயணிகள் அவருக்கு பிச்சை போட்டனர், ஒரு பயணி அதிகளவு பணத்தை பிச்சையாக போட்டார்.

அவரை விமான ஊழியர்கள் இருக்கையில் உட்கார கூறியும் அதை கேட்காமல் பிச்சையெடுத்தபடி இருந்தார்.

இந்த சம்பவம், குறித்த விமான நிறுவனம் பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதாவது, பிச்சைக்காரர் பயணியாகவே இருந்தாலும் அவரை சரியாக சோதிக்காதது ஏன்? விமான டிக்கெட்டை அவர் எப்படி பணம் கொடுத்து வாங்கியிருப்பார் மற்றும் குறித்த விமான நிறுவனமே விளம்பரத்துக்காக இவ்வாறு செய்கிறதா என கேள்விகள் எழும்பியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...