கருப்பின மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கறுப்பின மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தது தொடர்பான சர்ச்சையை அடுத்து அமெரிக்காவின் பீட்சா நிறுவனமான பப்பா ஜான்சின் தலைவர் பொறுப்பில் இருந்து ஜான் ஷ்னட்டர் விலகியுள்ளார்.

பப்பா ஜான்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பீட்சா விநியோகம் செய்து வரும் நிலையில் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இந்நிலையில் பப்பா ஜான்சின் தலைவர் ஜான் ஷ்ண்ட்டர் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றுடனான பேச்சுவார்த்தையின் போது கருப்பின மக்களுக்கு எதிரான வார்த்தையை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சையை அடுத்து அவர் பப்பா ஜான்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...