கால்பந்து போட்டியின் இடையே தீயணைப்பு வீரர்கள் செய்த வியக்க வைக்கும் செயல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

குரோஷியாவில் கால்பந்தாட்ட போட்டியினை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவசர மணி ஒலித்ததும் உடனடியாக தங்களது வேலைக்கு கிளம்பும் குரோஷியா தீயணைப்பு படையினரின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

ரஷ்யாவில் 21-வது உலக கிண்ண கால்பந்து போட்டி வெகுவிமரிசையாக நாய்ப்பெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நாக்-அவுட் சுற்று போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் குரோஷியாவை சேர்ந்த தீயணைப்பு படை பிரிவு வீடியோ ஒன்றினை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளது.

குரோஷியா - ரஷ்யா அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டியின் இடையே எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், 10 தீயணைப்பு படையினை சேர்ந்த வீரர்கள் இணைத்து தொலைக்காட்சியின் மூலமாக கால்பந்து போட்டியினை பார்த்து கொண்டிருக்கின்றனர். இரு நாடு ரசிகர்களையும் நாற்காலின் நுனி பகுதியில் அமர வைக்கும் அளவிற்கு விறுவிறுப்பான, பெனால்டி சூட்-அவுட் தருணம் அது.

அந்த நேரத்தில் திடீரென அவசர மணி ஒலிக்க உடனடியாக, தங்களது உடைகளை மாட்டிக்கொண்டு வேகமாக வேலைகளுக்கு கிளம்புவதை போன்று அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

கால்பந்து போட்டியினை விட கடமையே முக்கியம் என நினைத்த தீ அணைப்பு வீரர்களுக்கு, தற்போது உலகின் பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

முன்னதாக இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...