உலகை மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு: விரைவில் திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
80Shares
80Shares
lankasrimarket.com

தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் தற்போது ஹாலிவுட் திரைப்படமாக தயாராக உள்ளது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாண எல்லையில் அமைந்துள்ளது தாம் லுவாங் குகை. ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாக கருத்தப்படும் இந்த குகையின் நீளம் 10 கிலோ மீற்றர் ஆகும்.

இந்த குகைக்குள் கடந்த 23ஆம் திகதி, 11 வயது முதல் 16 வயது வரையிலான 12 சிறுவர்கள் மற்றும் ஒரு துணை பயிற்சியாளர் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். இவர்கள் அனைவரும் பலதரப்பட்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மீட்பு பணியின்போது நீர்மூழ்கி ஒருவர் மரணமடைந்தார். இந்நிலையில், இச்சம்பவம் ஹாலிவுட்டில் திரைப்படமாக உள்ளது. பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் எனும் நிறுவனம் இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளது.

இந்த படத்திற்கு ‘God's Not Dead' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மிச்செல் ஸ்காட், மீட்பு பணிகள் நடந்த போது அதனை பார்வையிட்டுள்ளார்.

அதன் அடிப்படையிலேயே அவர் இந்தப் படத்தை எடுக்க உள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில் ‘உலக அளவில் மிகப்பெரிய வீர தீரச் செயலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அங்கு பார்த்தபோது மெய் சிலிர்த்து போனேன்.

இதுபோன்ற உத்வேகமிக்க செயலை நான் பார்த்ததில்லை. தன்னார்வத்துடன் நடந்த இந்த மீட்பு பணி உலக வரலாற்றில் ஒரு மைல்கல். எனவே தான் இதனை திரைப்படமாக்க முடிவு செய்தோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்டவை இன்னும் முடிவாகவில்லை. இத்திரைப்படம் சுமார் 400 கோடி செலவில் எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்