விண்வெளி ஆய்வு மையத்திற்கு 3 மணிநேரத்தில் பொருட்களை அனுப்பி சாதனை புரிந்த ரஷ்யா

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
32Shares
32Shares
lankasrimarket.com

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தேவையான பொருட்களை, 3.48 மணிநேரத்தில் ரஷ்யா அனுப்பி புதிய சாதனை படைத்துள்ளது.

கஜகஸ்தானில் உள்ள பைக்கனூர் விண்வெளி தளத்தில் இருந்து ரஷ்யா ராக்கெட் ஒன்றை, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளது.

அந்த ராக்கெட்டில் ஆய்வு மையத்திற்கு தேவையான, 3 டன் உணவுப் பொருட்களை ரஷ்யா அனுப்பியிருக்கிறது. இந்த ராக்கெட் 3 மணிநேரம் 48 நிமிடத்தில் விண்வெளி மையத்தை அடைந்துள்ளது.

இதன்மூலம், 2013ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையத்திற்கு, குறைந்த நேரத்தில் பொருட்களை அனுப்பிய தனது சொந்த சாதனையையே ரஷ்யா தற்போது முறியடித்துள்ளது.

NASA TV

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்