தாய்லாந்தில் மீட்பு படை வீரர்களுக்கு உதவும் உள்ளூர் மக்களின் வியக்க வைக்கும் செயல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
330Shares
330Shares
lankasrimarket.com

தாய்லாந்தில் குகையில் சிக்கியிருக்கும் சிறுவர்களை மீட்பதற்காக குவிந்திருக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படை வீரர்களுக்கு உணவு, உடை என தேவையான உதவிகள் அனைத்தும் செய்து வரும் உள்ளூர் பொதுமக்களின் செயல் வியக்க வைப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தில் தி தம் லுஅங் கோகி பகுதியில் சுற்றுலா சென்ற கால்பந்தாட்ட சிறுவர்கள் 12 பேர் தங்களது பயிற்சியாளர் உடன் இணைந்து, அங்கு ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக குகையிலேயே சிக்கி கொண்டனர்.

9 நாட்களுக்கு பிறகு பிரித்தானியாவை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரார்களின் உதவியுடன் சிறுவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது கண்டறிப்பட்டது.

இதனையடுத்து உதவ முன்வந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்களும், தாய்லாந்தில் முகாமிட்டுள்ளனர். கடந்த 16 நாட்களாக குகைக்குள்ளேயே சிக்கிக்கொண்டிருக்கும் சிறுவர்களை மீட்கும் பணியில் அமெரிக்கா, ஜப்பான், சீனா , இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாகவே துணி கூட மாற்றாமல் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு உள்ளூரை சேர்ந்த பொதுமக்கள் பலரும், உண்ண உணவு, உடுத்த உடை என ஏராளாமான உதவிகள் செய்து வருகின்றனர்.

முன்னதாக குகையில் சிக்கியஇருந்த 13 பேருமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்