பச்சிளங்குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரன்: 9 மணி நேரம் கழித்து நிகழ்ந்த அதிசயம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
212Shares
212Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் உள்ள காட்டில் குப்பைகள் மற்றும் குச்சிகள் மத்தியில் 5 மாத குழந்தை புதைக்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.

மிசவுலா நகரில் உள்ள காட்டுப்பகுதியில் பிறந்து 5 மாதங்களே ஆன குழந்தை அழும் சத்தம் கேட்ட நிலையில் அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்தபோது அங்கிருந்த பிரான்சிஸ் கிரவ்லே (32) என்ற நபர், நான் தான் குழந்தையை 9 மணி நேரத்துக்கு முன்னர் புதைத்தேன் என கூறினார்.

இதையடுத்து குழந்தை புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்ற அதிகாரிகள் குழந்தையை மீட்டனர்.

குப்பைகள், இலைகள் மற்றும் குச்சிகள் குவியலுக்கு கீழ் குழந்தை புதைக்கப்பட்டிருந்த போதும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் கிரவ்லேவை கைது செய்தனர்.

கிராவ்லேவுக்கு குழந்தை என்ன உறவு என தெரியாத நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்