பேய் மழையால் தத்தளிக்கும் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பீதியில் உறைந்த பொதுமக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
186Shares
186Shares
ibctamil.com

ஜப்பானில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால் இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிக்டர் அளவில் 6 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் தலைநகர் டோக்கியோவை உலுக்கியதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியாகவில்லை என தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்தும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தை அடுத்து சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே ஜப்பானின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவு போன்று காட்சி அளிக்கிறது.

இதுவரை மழைக்கு 20 பேர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள Hiroshima, Okayama, Kyoto மற்றும் ஏனைய பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் இறப்பு எண்ணிக்கையை 20 என தெரிவித்தாலும், 50-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

மேலும் சுமார் 1.6 மில்லியன் பொதுமக்களை பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்