போலந்து நாட்டில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி பலியான பரிதாபம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
74Shares
74Shares
ibctamil.com

போலந்து நாட்டின் போர் விமானம் ஒன்று நேற்று அதிகாலை விழுந்து நொறுங்கியதில் அதன் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த விமானியால் விமானத்திலிருந்து வெளியே வர முடிந்தாலும், மருத்துவ உதவிக் குழுவினர் 2.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்ததாக போலந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து ஒரு துயரச் சம்பவம் என அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் Mariusz Blaszczak, விமானியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிரி விமானத்தை வழி மறித்து தாக்கும் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்