திருமணத்திற்கு பின்னர் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாத நோர்வே கணவன்! ஸ்கைப்பில் பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
2225Shares
2225Shares
lankasrimarket.com

சென்னையில் திருமணமாகி 9 மாதங்களாகியும் வாழக்கை நடத்துவதற்கு நோர்வே நாட்டுக்கு கணவர் அழைத்து செல்லாத காரணத்தால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சுவாதிகா ஸ்ரீ என்பவருக்கும், நோர்வேயில் வேலை பார்த்து வந்த கீர்த்திவாசனுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப்பிறகு சுவாதிகாஸ்ரீயை நோர்வேக்கு அழைத்துச் செல்வதாக கீர்த்திவாசன் கூறியிருந்தார். ஆனால், அழைத்துச் செல்லவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கணவர் தன்னை நோர்வேக்கு அழைத்து செல்லாத காரணத்தால் மனமுடைந்த சுவாதிகாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி தனது கணவருடன் ஸ்கைப்பில் பேசியபடி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருமணமாகி 9 மாதங்களில் சுவாதிகா ஸ்ரீ தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்தது. அந்த விசாரணைக்கும் கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினர் வரவில்லை.

சுவாதிகா ஸ்ரீயின் பெற்றோர் பொலிசாரிடம் கொடுத்துள்ள புகாரில், `என்னுடைய மகள் தற்கொலைக்கு கீர்த்திவாசனும் அவரின் குடும்பத்தினர்தான் காரணம் என கூறியுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று, கீர்த்திவாசனுடன் சுவாதிகா ஸ்ரீ ஸ்கைப் மூலம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், சுவாதிகா ஸ்ரீயிடம், தரக்குறைவாக கீர்த்திவாசன் பேசியதாக தெரியவந்துள்ளது.

மேலும், உன்னை என்னுடன் நோர்வேக்கு அழைத்துச் செல்லவோ உன்னுடன் வாழ எனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று கூறியுள்ளார். நீ உயிரோடு இருந்தால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது என கீர்த்திவாசன் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்து சுவாதிகா ஸ்ரீ தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் சுவாதிகா ஸ்ரீயின் தற்கொலைக்கு கீர்த்திவாசன் மற்றும் அவரின் குடும்பத்தினர் காரணம் என்று தெரியவந்தது.

இதனால், இந்த வழக்கை தற்கொலைக்குத் தூண்டியதாக பொலிசார் மாற்றியுள்ளனர். மேலும் இதுகுறித்து கீர்த்திவாசன் வீட்டினரிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்