பிரபல பாடகரின் சிலையை வைத்து அசிங்கமாக நடந்து கொண்ட இளம் பெண்கள்: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொலாம்பிய நாட்டின் பிரபல பாடகர் சிலையின் மீது ஏறி அமர்வது, முத்தம் கொடுப்பது என இளைஞர்கள் மற்றும் பெண்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்வது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கொலாம்பியாவின் மிகப் பிரபலபாமான பாடகர் Diomedes Diaz. கடந்த 2013-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக தன்னுடைய 56 வயதில் மரணமடைந்தார்.

இதையடுத்து இவர் தொடர்பான சிலை பொதுமக்கள் பலர் கூடும் பகுதியில் வைக்கப்பட்டது. தங்கநிறத்தால் ஆன இவர் சிலை முன்பு நின்று பலரும் புகைப்படம் எடுத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு இந்த சிலையை வைத்து மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். ஒரு பிரபலமான பாடகரை அசிங்கப்படுத்தும் வகையில் சிலர் நடந்து கொள்வதால், அவரின் சிலை அந்த இடத்தில் இருந்து சில நாட்களில் அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...