உலகையே அதிரவைத்த மிகக் கொடூரமான கொலைகாரர்கள் இவர்கள் தான்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சிலர் தன்னிலை மறந்து ஆத்திரத்தில் அதனை செய்வார்கள்.

சிலர் திட்டமிட்டு ஏதோ ஒரு காரியத்திற்காகவோ அல்லது அதனையே தொழிலாகவோ செய்து வருவார்கள். ஆனால் இவர்களை விட மிக கொடியவர்கள் என்றால் ‘Serial Killers' என்று அழைக்கப்படும் சைக்கோ கொலைகாரர்கள் தான்.

மனரீதியாக பாதிக்கப்பட்ட இவர்கள், கொலை செய்வதை ஒரு Hobby ஆகவே செய்வார்கள். தற்போது, உலகின் மிக கொடூரமான 5 Serial Killers குறித்து காண்போம்.

கேரி ரிட்ஜ்வே (அமெரிக்கா)

அமெரிக்காவைச் சேர்ந்த கேரி ரிட்ஜ்வே என்பவன், 1980-90களில் தொடர் கொலைகளில் ஈடுபட்டு வந்துள்ளான். கடந்த 2001ஆம் ஆண்டில் இவன் 4 பேரை கொலை செய்ததாக தெரிய வந்தது. அதன் பின்னர் அவன் கைது செய்யப்பட்டபோது தெரிய வந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, வாஷிங்டன் நகரில் மட்டும் இவன் 70 பெண்களை கொலை செய்திருந்ததாக தெரிய வந்தது. Green River எனும் நதியில் இவன் பலரை கொலை செய்து புதைத்திருந்ததால், ‘Green River Killer' என இவன் அழைக்கப்பட்டான்.

அதன் பின்னர், இவனுக்கு ஜாமீன் இல்லாத வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

பெட்ரோ ரோட்ரிக்ஸ் ஃபிலிஹோ (பிரேசில்)

பிரேசிலைச் சேர்ந்த Serial Killer பெட்ரோ ரோட்ரிக்ஸ் ஃபிலிஹோ. இவன் தனது 14 வயதில் துவங்கி தனது தந்தை உட்பட மொத்தம் 71 பேரை கொலை செய்துள்ளான். கடந்த 1973ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 128 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் பெட்ரோ, சிறையிலேயே 47 பேரை கொலை செய்தான். இதனால் இவனுக்கு 400 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. எனினும், 2007-யில் விடுதலையான இவன், 2011ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டான்.

டேனியல் காம்கோபோ பார்போசா (கொலம்பியா)

கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவன் டேனியல் காம்கோபோ பார்போசா. இவனுக்கு 1989ஆம் ஆண்டு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவன் மீதுள்ள குற்றம் என்னவென்றால், 150க்கும் மேற்பட்ட இளம்பெண்களை கற்பழித்ததும், அதில் 72 பெண்களை கொலை செய்ததும் தான். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஹரோல்ட் ஷிப்மேன் (பிரித்தானியா)

பிரித்தானியாவைச் சேர்ந்த மருத்துவர் ஹரோல்ட் ஷிப்மேன். பெரும் செல்வந்தரான இவன், சுமார் 250 பேரை கொலை செய்துள்ளான். இவன் தன்னுடன் பணிபுரிந்தவர் முதல் பலரை கொலை செய்துள்ளான். அதன் மூலம் பணம் சேர்த்து வந்துள்ளான்.

இவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு இவன் தனது பிறந்தநாள் அன்றே சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

பெட்ரோ அலோன்சோ லோபஸ் (கொலம்பியா)

கொலம்பியாவைச் சேர்ந்த பெட்ரோ அலோன்சோ லோபஸ் தான் உலகிலேயே கொடூரமான Serial கொலைகாரன் ஆவான். தென் ஆப்பிரிக்காவை சுற்றிலும் இவன் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலிய பலாத்காரம் செய்துள்ளான்.

அவர்களில் பலரது உடல்களை யாருமில்லாத கட்டிடங்களில் புதைத்து வைத்திருந்தான். ஆனால், இவன் கொலை செய்தவர்களில் 53 பேரின் உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. இவனுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...