பொதுக்கூட்ட மேடையில் வெடித்த வெடிகுண்டு: நூலிழையில் உயிர் தப்பிய ஜிம்பாப்வே ஜனாதிபதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஜிம்பாப்வே ஜனாதிபதி Emmerson Mnangagwa கலந்து கொண்ட தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் வெடி குண்டு வெடித்ததில் நூலிழையில் அவர் உயிர் தப்பியுள்ளார்.

குறித்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி Emmerson Mnangagwa, இது ஒரு கோழைத்தனமான செயல் என தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த வெடிகுண்டு தாக்குதலில் துணை ஜனாதிபதிகள் Constantino Chiwenga மற்றும் Kembo Mohadi ஆகிய இருவரும், மற்றும் ஒரு அமைச்சரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் வெளியான புகைப்படங்களில் மக்கள் ரத்த காயங்களுடன் சிதறி ஓடுவது பதிவாகியுள்ளது.

ஜிம்பாப்வேயில் அடுத்த ஒரு மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி Emmerson Mnangagwa பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதுவரை தேர்தல் பரப்புரைகள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்று வருகிறது. ஆனால் அதை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி Emmerson Mnangagwa தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...