கால்பந்தாட்ட வீரர்கள் மூலம் கர்பமடைந்தால் பரிசு: சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய உணவகம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கால்பந்தாட்ட வீரர்களின் மூலம் கர்பமடையும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்ற வினோதமான அறிவிப்பினை வெளியிட்ட ரஷ்ய உணவகம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பலநாடுகளை சேர்ந்த நட்சத்திர வீரர்களும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். அவர்கள் மூலம் கர்பமடையும் பெண்களுக்கு, 3 மில்லியன் ரூபல்கள் பரிசாக வழங்கப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் வூப்பர்ஸ் என்கிற சாக்லேட் இலவசமாக வழங்கப்படும் எனவும் ரஷ்யாவை சேர்ந்த பர்கர் கிங் என்ற நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது.

பர்கர் கிங் என்ற உணவகத்தின் இந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட நிறுவனம் தங்களது தவறுக்கு மன்னிப்பு கூறியதோடு, இனிமேல் இதுபோன்ற தவறு எதுவும் நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக பர்கர் நிறுவனம் இதுபோன்று ஆபாச படங்களை வெளியிடுவதும், அது மிகப்பெரிய சர்ச்சையான பின்னர் மீண்டும் மன்னிப்புகோருவது வழக்கமான ஒன்றாகாவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்