உணவு இடைவேளை எடுத்துக் கொண்ட ஊழியர்: வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய நிர்வாகம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஜப்பானில் தண்ணீர் விநியோகிக்கும் நிறுவன ஊழியர் ஒருவர் 3 நிமிடம் உணவு இடைவேளை எடுத்துக் கொண்டதால் அந்த நிறுவனம் தமது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரில் அமைந்துள்ள தண்ணீர் விநியோக நிறுவனம் ஒன்றில் 64 வயது நபர் பணியாற்றி வந்துள்ளார்.

குறித்த நபர் தொடர்ந்து 7 மாதத்தில் மொத்தம் 78 நிமிடங்கள் உணவு இடைவேளை எடுத்துள்ளார்.

ஆனால் வேலை நேரத்தில் அவரது இருக்கையில் அவர் இல்லாதது கண்ட நிர்வாகம், குறித்த நபரை அழைத்து விசாரித்துள்ளது.

அந்த ஊழியர் தினசரி மதிய உணவு நேரத்தில் 3 நிமிடங்கள் உணவு வாங்கும் பொருட்டு அருகாமையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

மொத்தம் 26 முறை அவர் உணவு இடைவேளை எடுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து தமது ஊழியரில் பொறுப்பற்ற செயலுக்காக அந்த நிறுவனம் தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கோரியுள்ளதுடன், அவரது அரை நாள் ஊதியத்தையும் ரத்து செய்துள்ளது.

குறித்த ஊழியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் ஜப்பானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எந்தமாதிரியான நிறுவனம் அது, நபர் ஒருவர் கழிவறைக்கும் செல்லக் கூடாதா என ஒருவர் கோபமாக கேட்டுள்ளார்.

ஜப்பான் நாட்டை பொறுத்த மட்டில் அங்குள்ள மக்கள் தேவையின்றி விடுப்பு எதையும் எடுப்பதில்லை. மட்டுமின்றி நீண்ட பல மணி நேரம் வேலை பார்ப்பதற்கும் அஞ்சுவதில்லை.

நான்கில் ஒருபங்கு ஜப்பானிய நிறுவனங்களில் மாதந்தோறும் 80 மணி நேரத்திற்கும் அதிகமாக ஊழியர்கள் கூடுதல் நேர பணி செய்துள்ளனர் என்பது சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...