நிறைமாத கர்ப்பிணி கழிப்பறையில் பிரசவித்த கொடூரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வங்காளதேசத்தில் கணவரால் கைவிடப்பட்ட இந்திய பெண் ஒருவர் காவல் நிலையத்தின் கழிவறையில் குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மரச்சாமான்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த் அப்துல் என்பவர் ரோக்‌ஷனா அக்தர் எனும் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

கர்பமாக இருந்த ரோக்‌ஷனாவை வங்காளதேசத்தின் நாராயணகஞ்ஜ் பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு கடந்த மாதம் அப்துல் அழைத்து சென்றார்.

அங்கு, ரோக்‌ஷனாவை கைவிட்டுவிட்டு அவரது பாஸ்போர்ட்டையும் எடுத்துக்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் அப்துல் மாயமானார்.

வங்காளதேசத்தில் ஆதரவு ஏதும் இன்றி நிர்கதியாக இருந்த ரோக்‌ஷனா, நாராயணகஞ்ஜ் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறியுள்ளார்.

முறையான ஆவணங்களின்றி பயணம் செய்த அவரை டிக்கெட் பரிசோதகர் கமால்பூர் ரெயில்வே காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரோக்‌ஷனா, அங்கிருந்த கழிப்பறையில் ஆண் குழந்தையை பிரசவித்த கொடூரம் நடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தாயையும் குழந்தையையும் பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இந்தியாவில் உள்ள ரோக்‌ஷனாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களையும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers