வெள்ளத்தில் சிக்கிய உலகக்கிண்ண கால்பந்தாட்ட நகரம்: ஹீரோவாக இறங்கி காப்பாற்றிய இளைஞர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டதால், வெள்ளத்தில் சிக்கிய பெண்களை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ரஷ்யாவில் தற்போது உலகக்கிண்ண கால்பந்தாட்ட் போட்டி நடைபெற்று வருவதால், உலகில் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் பலரும் தற்போது ரஷ்யாவிற்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு உலகின் தலைசிறந்த அணிகள் சொதப்பி வருகின்றன, எதிர்பார்க்காத கத்துக் குட்டி அணிகள் ஆச்சரியத்தை கொடுக்கின்றன.

இந்நிலையில் ரஷ்யாவின் Nizhny Novgorod நகரத்தில் திடீரென்று நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால் அந்நகரின் அருகிலிருந்த Volga நதியில் நீர் நிரம்பியதால், ஆற்றில் இருந்த நீர் நகரின் உள்ளே புகுந்துள்ளது.

திடீரென்று நீர் புகுந்ததால், சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். அதிலும் சில பெண்கள் காரின் உள்ளே இருந்து வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தனர்.

அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் தைரியமாக இறங்கி காரின் உள்ளே இருந்த பெண்களை காப்பாற்றியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியதால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers