தம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அக்கா! 15 வருட உறவு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் தன்னுடன் பிறந்த சகோதரியை நபர் ஒருவர் முறைப்படி பதிவு திருமணம் செய்துகொண்டார்.

Debby Zutant (50) என்ற பெண்மணியும், Joe (37) என்ற நபரும் சகோதரர்கள் ஆவார். 15 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த ரகசிய திருமணத்தை குடும்பத்தாரிடம் மறைத்து வைத்திருந்த இவர்கள், 10 ஆண்டுகள் கழித்து உண்மையை கூறியுள்ளனர்.

இதுகுறித்து Debby கூறியதாவது, நான் 3 வயதிலேயே ஒரு பெற்றோரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டேன். எனது உண்மையான பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட்ட போது 2003 ஆம் ஆண்டு அவர்களை கண்டுபிடித்து அவர்களோடு இணைந்தேன்.

அப்போது, உனக்கு ஜோ என்ற சகோதரன் இருப்பதாக என்னிடம் எனது பெற்றோர் கூறினார்கள். முதல் முதலாக ஜோவை நான் சந்திக்கும்போது எனக்கு வயது 35, அவனுக்கு வயது 23. அவனைப்பார்த்தவுடன் எனக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.

இதே உணர்வு அவனுக்குள்ளும் ஏற்பட்டதால், நாங்கள் ஆரம்பத்தில் டேட்டிங்கில் இருந்தோம். பின்னர் காதலர்களாக மாறி ஒன்றாக வசித்து வந்தோம்.

எங்கள் இருவரது உடம்பில் ஒரே இரத்தம் ஒடுகிறது என்றாலும், நாங்கள் இருவரும் ஒன்றாக வளரவில்லை. இதனால், எங்களுக்குள் அக்கா - தம்பி என்ற உணர்வு ஒருபோதும் வந்ததில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers