இளம்பெண் சுட்டுக் கொலை: துடிதுடிக்க இறந்த பரிதாபம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் பைசாலாபாத் நகரில் தனியார் பேருந்து நடத்துனராக பணியாற்றுபவர் மஹ்விஷ்(வயது 19).

இளம்பெண்ணான இவர் குடும்பத்தாரை பிரிந்து விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

அங்கே காவலாளியாக வேலை செய்யும் உமர் டரஸ் என்பவருக்கு மஹ்விஷ் மீது காதல் மலர்ந்துள்ளது.

தன் காதலை வெளிப்படுத்திய போதும் மஹ்விஷ் நிராகரித்து விட்டாராம்.

இதனால் கோபமடைந்த உமர், மஹ்விஷ்ஷின் விடுதிக்கு சென்று கையை பிடித்து இழுத்துள்ளார்.

இதில் நடந்த தகராறில் உமர், மஹ்விஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இக்காட்சிகள் சிசிடிவி கமெராவில் பதிவாக பொலிசார் உமரை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப் மாகாண காபந்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers