வெளியானது உலக பணக்காரர்களின் பட்டியல்! முதலிடத்தில் யார்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரின் மொத்த சொத்து மதிப்பு 141.9 billion டொலர் ஆகும். ஜெப் பிசோஸ் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார்.

தற்போது இந்த நிறுவனம் உலகின் மிகப் பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

உலகின் மிகப் பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்து அமேசான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போர்ப்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிடித்துள்ளார். நீண்ட காலம் உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற இடத்தை பிடித்திருந்த பில்கேட்ஸ் தற்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தற்போது இவரின் மொத்த சொத்து மதிப்பு 92.9 billion டொலர் ஆகும்.

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர்களின் பட்டியல் இதோ

Jeff Bezos - 141.9 billion டொலர்

Bill Gates - 92.9 billion டொலர் .

Warren Buffett - 84 billion டொலர்

Bernard Arnault - 72 billion டொலர்

Mark Zuckerberg - 71 billion டொலர்

Amancio Ortega - 70 billion டொலர்

Carlos Slim Helu - 67.1 billion டொலர்

Charles and David Koch - $60 billion டொலர்

Larry Ellison - 58.5 billion டொலர்

Michael Bloomberg - $50 billion டொலர்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்