தொலைக்காட்சி நேரலையில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடுமை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் நேரலையில் செய்தி அளித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு இளைஞர் ஒருவர் கட்டியணைத்து முத்தம் தந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறித்த சம்பவத்தை அடுத்து துணிச்சலுடன் அவர் செய்தி தருவதை தொடர்ந்தது பலராலும் பாராட்டப்பட்டது.

ஜேர்மன் செய்தி ஊடகம் ஒன்றிற்காக கொலம்பியா பெண் செய்தியாளர் ஒருவர் ரஷ்யாவில் இருந்து உலக கிண்ணம் தொடர் விளையாட்டு செய்திகளை தொகுத்து வழங்கி வந்தார்.

நேரலையில் செய்தியாளர் Gonzalez Theran செய்திகளை தொகுத்து வழங்கும்போது தான் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

அவர் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று கமெரா முன்பு தோன்றிய நபர் அவரது மார்பில் கைவைத்துவிட்டு கன்னத்திலும் முத்தமிட்டுள்ளார்.

இந்த திடீர் சம்பவத்தால் குறித்த பெண் செய்தியாளர் ஒரு கணம் அதிர்ந்தாலும், சுதாரித்துக் கொண்டு மீண்டும் தனது பணியை தொடர்ந்துள்ளார்.

குறித்த காணொளியை தமது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த Gonzalez, இரண்டு மணி நேரம் அந்த வளாகத்தில் காத்திருந்து தாம் செய்திகளை சேகரித்தபோது தமக்கு எதுவும் நேரவில்லை,

ஆனால் நேரலை துவங்கிய சில நிமிடங்களில் அந்த நபர் அருகாமையில் வந்து முத்தமிட்டதுடன் மார்பிலும் தொட்டுவிட்டு சென்றுள்ளார் என பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற வக்கிர செயற்பாடுகளை கண்டிப்பாக நாம் எதிர்க்க வேண்டும் எனவும் அந்த பதிவில் அவர் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers