சிறுத்தையிடம் போராடி பரிதாபமாக உயிரைவிட்ட ராட்சத பல்லி: வெளியான அரியவகை காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஜாம்பியாவில் சிறுத்தையிடம் சிக்கிய ராட்சத பல்லி ஒன்று தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு Frangeskides என்ற சுற்றுலாப்பயணி சக சுற்றுலாப்பயணிகளுடன் சபாரி ஜீப்பில் சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த சிறுத்தை ஒன்று, ராட்சத பல்லியை அடித்து சாப்பிடுவதற்காக முயற்சி செய்துள்ளது.

ஆனால் பல்லி தன்னுடைய வாலை வைத்து சிறுத்தையின் முகத்தில் தொடர்ந்து அடித்ததால், சிறுத்தை தடுமாறியது.

சிறுத்தையிடமிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று பல்லி தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த நிலையில், சிறுத்தை பல்லியின் கழுத்தை பிடித்து கடித்து சென்றுவிட்டது.

அந்த சிறுத்தையின் அருகே இன்னொரு சிறுத்தையும் நின்றிருந்தது. இது தொடர்பான வீடியோவை Frangeskides வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers