தீயில் கருகி இறந்த இளைஞர்? இறுதிச் சடங்கில் உயிரோடு வந்ததால் உறவினர்கள் கண்ணீர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாராகுவேவில் Amambay பகுதியில் அமைந்திருக்கும் Santa Teresa என்ற கிராமத்தில் Juan Ramon Alfonso Penayo என்ற 20 வயது இளைஞர் இறந்துவிட்டதால், அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

அப்போது இறந்ததாக கூறப்பட்ட அந்த இளைஞர் இறுதிச் சடங்கின் போது எதிரே வந்து நின்றதால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து குடும்பத்தினர் அவரை அணைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், கடந்த வாரம் வியாழக்கிழமை Juan Ramon Alfonso Penayo என்ற இளைஞன் வீட்டை விட்டு வெளியேறி, அதன் பின் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனடியாக பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்போது தீயில் கருகிய நிலையில் உடல் ஒன்று அடையாளம் தெரியாத நிலையில் கிடந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த பொலிசார் இது Juan Ramon Alfonso Penayo ஆகத் தான் இருக்கும், ஏனெனில் இந்த பகுதியில் போதை பொருள் கடத்தும் கும்பல் அதிகம் உள்ளதால், அவர்கள் இது போன்ற சம்பவங்களை சாதரணமாக செய்துவிட்டு சென்றுவிடுவார்கள் என்று கூறி, இளைஞரின் குடும்பத்தாரிடம் அந்த உடலை ஒப்படைத்துள்ளனர்.

இதனால் அவரின் பெற்றோர் உட்பட பலரும் வேதனையில் இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்த போது, அவர் சர்வசாதரணமாக வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.

இதையடுத்து இறந்த நபர் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்