எங்கள் நாட்டு ராணுவ வீரர்களை அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு கொன்றுவிட்டது: ஈராக் அதிரடி குற்றச்சாட்டு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சிரியா எல்லையில் ஹஷெத் அல் ஷாபி படைப்பிரிவு வீரர்கள் 22 பேரை, அமெரிக்க ராணுவம் கொன்றுவிட்டதாக ஈராக் குற்றஞ்சாட்டியுள்ளது.

சிரியா நாட்டின் எல்லையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாமிட்டிருந்ததாகவும், அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் தங்கள் நாட்டின் ஹஷெத் அல் ஷாபி படைப்பிரிவினர் ஈடுபட்டிருந்ததாகவும் ஈராக் தெரிவித்தது.

இந்நிலையில், குறிப்பிட்ட பகுதியில் தங்களது ராணுவத்தினர் இருப்பதை தெரிந்து கொண்டு அமெரிக்க விமானங்கள் குண்டு வீசியதாகவும், அதில் ஹஷெத் அல் ஷாபி வீரர்கள் 22 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈராக் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு அமெரிக்கா மறைமுகமாக ஆதரவளிப்பதாகவும் ஈராக் தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers