கார் விபத்தில் சிக்கிய இளவரசர் ரனாரித் படுகாயம்: மனைவி பரிதாப மரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
124Shares

கம்போடியாவில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளவரசரை சிகிச்சைக்காக பாங்காக் அழைத்துச் சென்றுள்ளனர்.

கம்போடியா நாட்டில் அடுத்த மாதம் 29 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அந்நாட்டின் இளவரசரும், முன்னாள் பிரதமருமான நோரோடோம் ரனாரித் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக Norodom Ranariddh மற்றும் அவருடைய மனைவி Ouk Phalla(39) இருவரும் நேற்று பிரீச் ஷிஹானுக் மாகாணத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த வாடகை கார் ஒன்று அவர்கள் பயணித்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் இளவரசர் ரனாரித்தும், அவுக் பால்லாவும் படுகாயம் அடைந்தனர்.

இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் அவுக் பால்லா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த நிலையில் படுகாயம் அடைந்த இளவரசர் ரனாரித்தை மேல்சிகிச்சைக்காக பாங்காக் கொண்டு சென்றுள்ளனர்.

ரனாரித் 1993-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை கம்போடியாவில் பிரதமராக பதவி வகித்தார். மட்டுமின்றி இவர் கம்போடிய மன்னர் சிஹாமோனியின் ஒன்றுவிட்ட சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்