உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலாத்தலங்களின் பட்டியல் வெளியானது

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
193Shares

உலகின் பிரபலமான சுற்றுலாத்தலங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் சர்வதேச நிறுவனம் ஒன்று உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலாத்தலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் மிகவும் ஆபத்தான 10 சுற்றுலாத்தலங்கள் குறித்தும் அதிக எண்ணிக்கையிலான பயண காப்பீடு கோரும் நாடுகள் குறித்தும் அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த பட்டியலின் முதலிடத்தில் தாய்லாந்து உள்ளது. இங்குள்ள கடற்கரைகள், கோவில்கள், சுவை மிகுந்த உணவுகள் என சுற்றுலா பயணிகளை கவரும் பல அம்சங்கள் இருந்தாலும் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகளும் மிக் மிக அதிகம் என கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் 23 சதவிகித சுற்றுலாபயணிகள் பயண காப்பீடு கோரியுள்ளனர்.

ஆனால் தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் பயணிகள் முன்னதாகவே அங்குள்ள சுற்றுலா தலங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பயணத்திற்கு ஆயத்தமாவது பாதுகாப்பானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குறித்த பட்டியலில் தாய்லாந்துக்கு அடுத்து அமெரிக்கா, ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலாத்தலங்கள்

  1. தாய்லாந்து
  2. சிலி
  3. அமெரிக்கா
  4. ஸ்பெயின்
  5. ஜேர்மனி
  6. நேபாளம்
  7. பெரு
  8. பிரான்ஸ்
  9. பஹாமாஸ்
  10. பிரேசில்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்