விளையாட கட்டாயப்படுத்தப்பட்ட கரடி! பயிற்சியாளரை குதறும் அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் சர்க்கஸ் ஒன்றில் ஒரு கரடியை ஒரு பெண் பயிற்சியாளர் ஸ்கேட்போர்ட் விளையாட கட்டாயப்படுத்த, அந்த கரடி அவருக்கு அடங்க மறுத்து தன்னை அடித்த இன்னொரு பயிற்சியாளர் மீது ஆக்ரோஷத்துடன் பாய்ந்து அவரைத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் பெண் பயிற்சியாளர் ஒருவர் ஸ்கேட்போர்ட் விளையாடும்படி ஒரு கரடியை கட்டாயப்படுத்துகிறார். அதற்கோ விளையாட விருப்பமில்லை.

எனவே அது தப்பியோட முயல்கிறது. ஒரு ஆண் பயிற்சியாளர் அதை குச்சியால் அடித்து மீண்டும் விளையாட வற்புறுத்துகிறார்.

கோபமடைந்த கரடி அவர் மீது பாய்ந்து அவரைக் கீழே தள்ளி அவரைக் கடுமையாகத் தாக்குகிறது.

உடன் நிற்கும் பிற பயிற்சியாளர்கள் இருவர் குச்சியால் அடித்து அவரை மீட்க முயல, பார்வையாளர்கள் பயத்தில் அலறுகிறார்கள்.

கடைசியாக ஒரு வழியாக அந்த பயிற்சியாளர் எந்த பாதிப்புமின்றி எழுகிறார். மற்ற பயிற்சியாளர்கள் கரடியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

பயிற்சியாளர் பார்வையாளர்கள் முன்னேயே கொல்லப்பட்டு விடுவாரோ என்று எண்ணத்தோன்றும் இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சியடையச் செய்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்