துருக்கி Sapanca பகுதியில் உள்ள காட்டில் ஒரு சிறிய நாய்க்குட்டியின் நான்கு கால்களையும் அதன் வாலையும் வெட்டி அதனை உயிருக்கு போராடும் நிலையில் விட்டு விட்ட சென்ற ஒரு கொடூரனின் செயல் அந்நாட்டு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அழகிய கண்களை உடைய கருப்பு நிற நாய் ஒன்றை துருக்கி வனப்பகுதியில் நான்கு கால்களும் வாலும் வெட்டப்பட்ட நிலையில் அங்குள்ளவர்கள் கண்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
அடுத்த வாரம் வரவிருக்கும் தேர்தலை கேள்விக்குறியாகியிருக்கிறது இந்த நாய் குட்டியின் மீதான கொடூரம்.
இஸ்தான்புல்லில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் துருக்கியின் ஜனாதிபதி Tayyip Erdogan தான் இரண்டாவது முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் விலங்குகள் மீதான பாதுகாப்பை அதிகப்படுத்துவேன் . விலங்குகளை துன்புறுத்துபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க ஏற்பாடு செய்வேன் என்றும் தனது பிரச்சாரத்தில் கூறினார்.
இந்த நாய்க்குட்டியின் மீதான கொடூரமான தாக்குதலால் அங்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இதன் காரணமாக ஒன்று கூடி இதற்காக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வரும் செயலும் அங்கு நடந்து வருகிறது.
அந்த நாய்க்குட்டிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அறுவை சிகிச்சையினை தாங்கும் வலிமை இல்லாத அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது.
அந்த நாய்க்குட்டிக்கு சிகிச்சை எடுக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி பார்ப்பவர் கண்களை ஈரமாக்குகிறது.