மனைவியையும் மாமனாரையும் சுட்டுக்கொன்ற கணவன்: அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Report Print Trinity in ஏனைய நாடுகள்
341Shares

வடக்கு தாய்லாந்தில் உள்ள Nakhon Pathom மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் வராண்டாவில் திடீரென தனது மனைவியையும் மாமனாரையும் கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று கொலையாளி சய்யாபொர்ன் தானாம்சி 31, தனது மனைவி தன்மாஸ், 26, மற்றும் தனது மாமனார் சாம்பன், 60 ஆகிய இருருடன் தனது 6 வார குழந்தைக்கான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

அப்போது மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தானம்சி வேலையில்லாமல் இருப்பதாக தெரிய வருகிறது.

அதுகுறித்து மாமனார் சாம்பன் மருமகனிடம் வாக்குவாதம் செய்துள்ளார், தனது மகள் மிக நல்லவள் என்றும் அதற்காகவாவது அவளை நீ நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இதனால் திடீரென கோபமடைந்த கணவன் தனது கை துப்பாக்கியை எடுத்து மாமனார் சம்மனை இரண்டு முறை தலையில் சுட்டு கொன்றிருக்கிறார். பிள்ளை பெற்று 6 வாரமேயான மனைவியையும் நெஞ்சு பகுதியில் ஒரு முறை சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் பதட்டமடைந்த நோயாளிகள் உயிரை காப்பாற்றி கொள்ள அங்குமிங்கும் ஓடினார்கள். நடந்த பயங்கர சம்பவத்தில் மேலும் இரண்டு நோயாளிகளுக்கும் துப்பாக்கி சூடு காரணமாக காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே மனைவியும் மாமனாரும் இறந்துவிட தன்னையும் துப்பாக்கியால் சுட்டு கொண்டிருக்கிறான் தானம்சி.

தகவல் தெரிந்த உடன் உடனடியாக காவல்த்துறையினர் வந்து பார்த்த போது அந்த இடமே ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. அங்கு .38 வகை பிஸ்டல் ஒன்றும் கைப்பற்ற பட்டது.

தற்போது சிகிச்சை பலனின்றி தனம்சி இறந்து விட்டான். அந்த 6 வார குழந்தை இப்போது யார் கண்காணிப்பில் இருக்கிறது என்பது குறித்து தகவல்கள் இல்லை.

கொலை செய்யப்பட தன்மாஸ் இரண்டு வாரங்களுக்கு முன் முக நூல் பதிவில் தான் கடந்து வந்த கொடூரமான உடல் நோய்களை பற்றி குறிப்பிட்டு "மரணம் நாம் நினைப்பதை விட வெகு சீக்கிரமாக வந்து விடும். ஆகவே உடல்நலத்தில் கவனமாக இருங்கள்" என்று அறிவுரை கூறியிருந்தார்.

அவ்வாறு கூறிய சில வாரங்களிலேயே மரணம் அவரை வந்து சேர்ந்து விட்டது.

கர்ப்பமாக இருந்த போதே சிறுநீரகம், நுரையீரல், இருதயம் ஆகிய உறுப்புகள் தன்மாசிற்கு பாதிப்படைந்தன. அதிலிருந்து மீண்டு வந்து குழந்தை பெற்றெடுத்த 6 வாரங்களில் அவர் இவ்வாறு கணவனாலேயே சுட்டு கொள்ளப்பட்டது அங்குள்ளோரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்