தாயின் இறுதிச்சடங்கில் சவப்பெட்டி விழுந்து உயிரிழந்த மகன்: சோக சம்பவம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
1647Shares

இந்தோனேஷியாவில் தனது தாயின் இறுதிச்சடங்கின்போது மகன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவப்பெட்டி வைப்பதற்கான தேர் தயார் செய்யப்பட்டு அதனுள் தாயின் சவப்பெட்டியை வைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

தேர் சற்று உயரமாக இருந்த காரணத்தால் மூங்கில் தடியால் ஏறும் படிகள் செய்யப்பட்டு, 6 பேர் சேர்ந்து சவப்பெட்டியை தூக்கிகொண்டு அந்த படியில் ஏறியுள்ளனர்.

இதில், அந்த படி உடைந்து இவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். மேலும், சவப்பெட்டியும் இவர்கள் மீது விழுந்துள்ளது.

இதில், சவப்பெட்டி விழுந்து மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

வீடியோவை காண

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்