கிம் ஜாங் உன் காரின் மிரளவைக்கும் வசதிகள்: என்ன விலை தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
252Shares
252Shares
ibctamil.com

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் பயன்படுத்தும் காரின் விவரம் குறித்து தெரியவந்துள்ளது.

Mercedes S600 Pullman Guard limo ரக காரை உபயோகப்படுத்தும் கிம் ஜாங், அதில் தான் நேற்று டிரம்புடன் சிங்கப்பூரில் ஒன்றாக சேர்ந்து வலம் வந்தார்.

காரின் வெளிப்பக்கம் கருப்பு நிறத்தில் உள்ள நிலையில் உள்பக்கம் முழுவதும் வெள்ளை தோல் அமைப்பை கொண்டுள்ளது.

குறித்த காரின் விலை 1 மில்லியன் டொலர்கள் இருக்கலாம் என கூறப்படுறது.

இதில் 517 குதிரைசக்தி உள்ளதோடு, 5.5 லிட்டர் bi-turbo V12 இஞ்சினும் கொண்டதாகும்.

21 அடி நீளம் கொண்ட இக்கார் கிம்முக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

துருப்பிடிக்காத எஃகினால் செய்யப்பட்ட பாதுகாப்பு பேனல்களை இக்கார் கொண்டுள்ளது.

காரின் கண்ணாடிகள் உடையாமல் இருக்க அதில் பாலிகார்பனேட் பூசப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்