தமிழருக்கு நன்றி கூறிய கிம் ஜாங் உன்! யார் இவர்?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
894Shares
894Shares
ibctamil.com

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உடனான சிங்கப்பூர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

சீனாவுக்கு பின்னர் வடகொரிய ஜனாதிபதியின் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ சிங்கப்பூர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளியான விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூரின் முக்கிய அமைச்சராக இருக்கிறார்.

TWITTER/VIVIAN BALAKRISHNAN

தமிழ் சமூகத்தை சேர்ந்த தந்தைக்கும், சீன சமூகத்தை சேர்ந்த தாய்க்கும் மகனாக பிறந்தவர் பாலகிருஷ்ணன்.

57 வயதாகும் பாலகிருஷ்ணனுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர், 2001ம் ஆண்டு அரசியலில் நுழைந்து 2004ம் ஆண்டில் இணை அமைச்சராகியுள்ளார்.

தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரானவர், 2015ம் ஆண்டில் வெளிவிவகாரத்துறை அமைச்சரானார்.

டிரம்ப் மற்றும் கிம் உடன் கணிசமான நேரத்தை செலவிட்ட ஒரே சிங்கப்பூர் தலைவர் இவராகும்.

TWITTER/VIVIAN BALAKRISHNAN

இருநாட்டு தலைவர்களின் குழுவை இணைப்பதில் முக்கிய பங்காற்றிய பாலகிருஷ்ணன், வடகொரியா ஜனாதிபதி சிங்கப்பூரை சுற்றிப் பார்க்கச் சென்ற போது கிம்முடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.

அத்துடன் டிரம்ப் சிங்கப்பூர் வந்திறங்கிய போது விமான நிலையம் சென்று டிரம்ப்பை வரவேற்றதும் இவர் தானாம்.

தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களிடமும் மாநாட்டை பற்றி விவரித்துள்ளார்.

இதனை ஒருங்கிணைத்ததற்காக வடகொரியா ஜனாதிபதி கிம் பாலகிருஷ்ணணிடம் நன்றிகள் தெரிவித்துக் கொண்டார்.

REUTERS

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்