மயக்கும் வசீகர குரல்: கிம் ஜாங் உன்னை கொண்டாடும் இணையவாசிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
332Shares
332Shares
ibctamil.com

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் குரல் வசீகரித்து மயக்கும் வகையில் உள்ளது இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.

சிங்கப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றதுடன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் இணைந்து அதி முக்கிய ஒப்பந்தம் ஒன்றையும் கையெழுத்து இட்டுள்ளனர்.

இந்த நிலையில் இணையத்தில் கிம் ஜாங் உன்னின் குரல் குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.

அமெரிக்கர் ஒருவர் குறிப்பிடுகையில், வடகொரிய தலைவரின் குரல் மிகவும் வசீகரிக்கும் வகையில் உள்ளது. மட்டுமின்றி ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் குரலுக்கு ஒத்துள்ளது எனவும் அவர் புகழ்ந்துள்ளார்.

பலர் தெரிவித்துள்ளனர், கிம்மின் குரல் அவரது உடலுக்கு ஏற்ப கம்பீரமாக இருக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் செக்ஸி குரலில் பேசுகிறார் என்றுள்ளனர்.

சிலர், கிம் ஜாங் உன்னின் குரல் இவ்வாறு இருக்க காரணம் தொடர்ந்து புகைப்பிடிப்பதால் கூட இருக்கலாம் என்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்