சிங்கப்பூரில் புன்னகையோடு கை குலுக்கிக் கொண்ட டிரம்ப்- கிம் ஜாங் உன்! வரலாற்று நிகழ்வு

Report Print Santhan in ஏனைய நாடுகள்
399Shares
399Shares
ibctamil.com

சிங்கப்பூரில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் நேரடியாக சந்தித்துக் கொண்டனர்.

சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்த பின்பு புன்னைகையோடு கை குலுக்கிக் கொண்டனர்.

அதுமட்டுமின்றி வடகொரியா உருவான பின் வடகொரியா, அமெரிக்க ஜனாதிபதிகள் சந்தித்துக்கொள்வது இதுவே முதல் முறை என்பதால் இது வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

மேலும் சந்தித்துக் கொண்ட இரு நாட்டு தலைவர்களும் அணுஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேசவுள்ளதாக கூறப்படுகிறது.முதல் இணைப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிங்கப்பூரில் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ள ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனையால், அந்நாட்டின் மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்தது. இதனால இரு நாடுகளும் பகை நாடுகளாக இருந்து வந்தன.

அதன் பின் சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சியால் கிம் ஜாங் உன் தன்னுடைய பிடிவாத போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்த விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.

அதன் பின் இரு நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தை இன்று சிங்கப்பூரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரின் சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஹோட்டலில் காலை 9 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் நேற்று முன் தினம் சிங்கப்பூர் வந்தனர். சிங்கப்பூர் வந்த வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அந்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்த்தார்.

அப்போது அங்கிருந்த மக்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ள ஹோட்டலுக்கு சற்று முன் புறப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகை நாடுகளாக இருந்து வந்த இருநாடுகளும் இன்னும் சில மணி நேரங்களில் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதால், உலகநாடுகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்