சினிமாவை மிஞ்சிய சம்பவம்: விமான நிலையத்தில் இளம்பெண் கடத்தல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்தில் மர்ம நபர்களால் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் பகுதியில் இருந்து கடந்த மே மாதம் 6 ஆம் திகதி ஜின்சாய் சென் என்ற 39 வயது பெண்மணி தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையில் இறங்கியுள்ளார்.

விமான நிலைய சோதனை முடித்து வெளியேற முயன்ற அவரை திடீரென்று ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை கடத்தி சென்றுள்ளது.

இவர்களுடன் மேலும் இரு நபர்கள் இணைய மொத்தம் 7 பேர் கொண்ட கும்பல் குறித்த பெண்மணியை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவரது கணவரை தொடர்பு கொண்ட கும்பல் சுமார் 232,000 பவுண்ட் தொகை கேட்டு மிரட்டியுள்ளது.

இதில் பெருவாரியான பணத்தை கைப்பற்றிய பின்னர் மேலும் 116,000 பவுண்ட்ஸ் தொகை கேட்டு மிரட்டியுள்ளது அந்த கும்பல்.

ஆனால் மேலும் பணம் தர தம்மால் முடியாது என கூறிய அந்த பெண்ணின் கணவர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் 13 நாட்களுக்கு பின்னர் Bang Na மாவட்டத்தில் உள்ள பிரதான சாலை ஒன்றின் அருகே கைவிடப்பட்ட நிலையில் ஜின்சாய் சென் மீட்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய சீனர்கள் 4 பேர் உள்ளிட்ட கும்பலை தேடி வருவதாகவும், கடத்தலில் ஈடுபட்ட அனைவரது தகவலும் திரட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்