ஈரான் குறித்து முடிவெடுக்க நீங்கள் யார்: அமெரிக்காவை கேள்வி கேட்ட ஈரான் அதிபர்

Report Print Trinity in ஏனைய நாடுகள்

ஈரானிற்காகவும் உலகிற்காகவும் கேள்வி கேட்க நீங்கள் யார் என்று அமெரிக்காவை கேள்வி கேட்டிருக்கிறார் ஈரான் அதிபர் ரூஹானி.

இரான் செய்ய வேண்டிய 12 விஷயங்கள் பற்றிய குறிப்புகள் குறித்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ கடந்த திங்கள் அன்று வாஷிங்க்டன் ஹெரிடேஜ் அறக்கட்டளை உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இவற்றை ஈரான் கடைபிடிக்காத பட்சத்தில் ஈரானின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையில் ஈரான் மீது பொருளாதார தடை ஏற்படுத்தப்படும் என்று அச்சுறுத்தும் வகையில் பாம்பியாவின் உரை அமைந்திருந்தது.

வாஷிங்டனின் இந்த திங்கள் இறுதி எச்சரிக்கை நிராகரித்த பின் பேசிய ரூஹானி , அமெரிக்கா கடந்த 15 வருடங்களாக மீண்டும் "புஷ் வழி" வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாகவும் உலகின் மீது தன் விருப்பத்தை திணிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபட முயல்கிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஈரானிற்காகவும் உலகிற்காகவும் முடிவெடுக்க நீங்கள் யார் என்று அமெரிக்காவை கேள்வி கேட்ட ஈரான் அதிபர் ரூஹானி அந்த சகாப்தம் முடிந்து விட்டது என்றும் ஒவ்வொரு நாடுகளும் தனித்தனியே சுதந்திரம் பெற்றுள்ளன என்றும் எங்கள் தேசங்களின் ஆதரவுடன் நாங்கள் எங்கள் பாதையை தொடர போகிறோம் என்று கூறியிருக்கிறார்.

பாம்பியோ குறிப்பிட்ட அந்த 12 குறிப்புகளில் எல்லாவித அணுசக்தி திட்டத்தையும் ஈரான் நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று வலியுறுத்தியது மட்டுமல்லாமல், அதன் பிராந்தியக் கொள்கையையும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், தவிர ஈரான் ஏவுகணைத் திட்டத்தை நிறுத்துமாறும் கூறியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் அனைத்து அமெரிக்க குடிமக்களையும் விடுவிக்க வேண்டும் என்றும், சிரியாவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், அமெரிக்கா "பயங்கரவாதிகள்" என்று கருதப்படும் குழுக்களுக்கு தரக் கூடிய ஆதரவை நிறுத்த வேண்டும் என்றும் அந்த குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் பாம்பியோவின் பேச்சு அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு பெரும் பின்னடைவுக்கான அறிகுறியாக இருக்கிறது என்று ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் ஜவாத் ஜெரிப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் சூழ்ச்சி திறன்கள் இன்னமும் பழைய முறையிலேயே வேலை செய்து வருகின்றன. தவறான கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்ட அதே வழிமுறைகளை இன்னமும் அமெரிக்கா கடைபிடிப்பது சரியல்ல. தவறான தேர்வுகள் தவறான முடிவுகளையே அறுவடை செய்யும் என்று ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜவாத் ட்விட் செய்துள்ளது தற்போது இரு நாடுகளுக்கிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்