70 வயதில் கர்ப்பமான மூதாட்டி! இது அவருக்கு எத்தனாவது குழந்தை தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் 70 வயது மூதாட்டி ஒருவர் கர்ப்பமாகி குழந்தை பெறவுள்ளதால், இவர் தான் உலகின் அதிக வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.

மெக்சிகோவின் Mazatlan பகுதியைச் சேர்ந்தவர் Maria de la Lu. 70 வயதான இவருக்கு ஏற்கனவே ஏழு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாகி எட்டாவது குழந்தையை பெற்றேடுக்கவுள்ளார்.

இது குறித்து Mazatlan கூறுகையில், மூன்று மாதங்களுக்கு முன்பே நான் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்பட்டேன். என் கால்கள் வலித்தன, தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தேன், இதைத் தவிர மயக்கம் ஏற்படுவதையும் உணர்ந்தேன்.

இதன் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்தேன். சுமார் 10 முறை சோதனை செய்த போதும் நான் கர்ப்பமாக இருப்பது உறுதியானதால், மருத்துவர்களே இதை நம்ப முடியாமல் திகைத்து போனர்.

அந்த சோதனையில் எனக்கு பெண் குழந்தை தான் பிறக்கப் போவதும் தெரியவந்தது என்று கூறியுள்ளார்.

மிகவும் வயதான இவருக்கு சுகப் பிரசவம் நடக்க வாய்ப்பில்லாத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தை பெற்றேடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன்னர் ஸ்பேயினைச் சேர்ந்த Maria del Carmen Bousada de Lara, கடந்த டிசம்பர் மாதம் 2006-ஆம் ஆண்டு தன்னுடைய 66 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றேடுத்தார்.

அதுவே உலகின் அதிக வயதில் குழந்தை பெற்றேடுத்த பெண்ணாக கூறப்பட்ட நிலையில், தற்போது 70 வயதில் இவர் குழந்தை பெற்றேடுக்கவுள்ளதால், இவரே இனி உலகின் அதிக வயதில் குழந்தை பெற்றேடுத்த பெண் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.

மேலும் இந்தியாவைச் சேர்ந்த Omkari Panwar என்ற பெண் கடந்த 2008-ஆம் ஆண்டு 70 வயதில் இரண்டு குழந்தைகள் பெற்றேடுத்ததாக கூறப்பட்டாலும் அது உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்