வெனிசுலா ஜனாதிபதி தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்ற நிக்கோலஸ் மடுரோ

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

வெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ 60 சதவித வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டியதுடன், தேர்தலையும் புறக்கணித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதில் நிக்கோலஸ் மடுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி புறக்கணிப்பு செய்ததால் 46.1 சதவித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிக்கோலஸ் மடுரோ மீண்டும் வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாகி உள்ளார். இதன்மூலம், அவர் மேலும் 6 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

இந்த வெற்றியை மடுரோவின் ஆதரவாளர்களும், தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில் 80 சதவித வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers