நடுவானிலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்! உயிருக்கு போராடிய பயணிகள்:100-க்கும் மேற்பட்டோர் பலி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கியூபாவில் நடுவானிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தில் உயிருக்கு போராடிய பயணிகளை தீயணைப்பு வீரர்கள் அழைத்து செல்வது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

கியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஹோல்குயின் நகருக்கு 104 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.

புறப்பட்ட சிறிது நேரத்திலே விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து காரணமாக உடனடியாக விரைந்துள்ள தீயணப்பு படையினர், விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.

கீழே விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்ததால், அதையும் தீயணைப்பு வீரர்கள் அணைக்க போராடி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை அங்கிருக்கும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மூன்று பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவரை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டதாகவும், அவர்களை உடனடியாக அங்கிருக்கும் Calixto Garcia மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், இதில் மீட்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளில் நான்கு குழந்தைகள் இருந்ததாகவும், அதில் ஒரு குழந்தைக்கு இரண்டு வயது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்தை அறிந்த கியூபா ஜனாதிபதி Miguel Diaz-Canel அங்கு விரைந்துள்ளதாகவும் விபத்தை நேரில் கண்ட அவர் பலியின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறியதாகவும், ஆனால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து தெரிவிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்