வீடு திரும்பிய ரஷிய முன்னாள் உளவாளி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பிரித்தானியாவில் நச்சுத்தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரஷிய முன்னாள் உளவாளி செர்ஜய் ஸ்கிர்பால், குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால்(66). இவர், சில ரஷிய உளவாளிகளை பிரித்தானிய உளவுத்துறையினரிடம் காட்டிக் கொடுத்தார்.

இதன் காரணமாக, கடந்த 2004ஆம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்ட ஸ்கிர்பாலுக்கு, 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த 2010ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு இவரை மீட்டு அடைக்கலம் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து, செர்ஜய் ஸ்கிர்பால் பிரித்தானியாவில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 4ஆம் திகதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வெளியில், ஸ்கிர்பால் தனது மகள் யூலியாவுடன்(33) மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான விஷம் ஏற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அதன் பின்னர், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவரின் உடல்நிலை மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், கடந்த மாதம் 9ஆம் திகதி யூலியா மருத்துவமனையில் இருந்து 'Discharge' செய்யப்பட்டனர்.

இந்நிலையில், செர்ஜய் ஸ்கிர்பாலும் உடல்நலம் தேறியதால் மருத்துவமனையிலிருந்து 'Discharge' செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவரும் பாதுகாப்பான, ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்