மாமனாரை உலக்கையால் அடித்து கொன்ற மருமகள்: வெளியான காரணம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜிம்பாப்வேயில் கோழி போட்ட முட்டைகளை மாமனார் கீழே தள்ளி உடைத்ததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்த மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

மவுசயர் கிராமத்தை சேர்ந்தவர் சோசானோ கோண்டோ, திருமணமான இவர் தனது கணவர் மற்றும் மாமனாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தனது வீட்டு நிலத்தில் கோண்டோ வேலை செய்து கொண்டிருந்த போது வீட்டு சமையலறையை அவர் மாமனார் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த தட்டு கீழே விழுந்துள்ளது, அந்த சத்தத்தை கேட்டு அங்கு கோண்டோ சென்ற போது தனது கோழிகள் போட்ட இரண்டு முட்டைகள் தட்டிலிருந்து கீழே விழுந்து உடைந்ததை பார்த்துள்ளார்.

இதையடுத்து முட்டைகளை ஏன் உடைத்தீர்கள் என மாமனாரிடம் அவர் கேள்வி கேட்க அது சண்டையாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கோண்டோ, அங்கிருந்த உலக்கையால் மாமனாரை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் கோண்டோவை கைது செய்த நிலையில் அவர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்