மண்ணுக்குள் மலைபோல் குவிந்து கிடந்த தங்கம், வைரங்கள்: 7 ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த தம்பதியினர் தங்களது வீட்டின் பின்புறத்தில் மரம் வைப்பதற்காக மண்ணை தோண்டியதில் தங்கம் மற்றும் வைரங்கள் கிடந்துள்ளதை பார்த்து ஆச்சரியம் ஆடைந்துள்ளனர்.

மேத்திவ் - மரியா தம்பதியினர் தங்கள் வீட்டின் பின்புறத்தில் மரம் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த மரத்தின் இலைகளை மான் கடித்து சாப்பிட்டுவிட்டதால் அது பட்டுப்போனது.

இதனால், புதிய மரம் ஒன்றை நடுவதற்காக வீட்டின் பின்புறத்தில் மண்ணை தோண்டியுள்ளனர். அப்போது, பெரிய அளவிலான பெட்டி ஒன்று இருந்துள்ளது.

அதனை திறந்துபார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் அந்த பெட்டிக்குள், தங்கங்கள், வைரங்கள், அதிகமான நிச்சயதார்த்த மோதிரங்கள் 52,000 டொலர் பணம், மற்றும் பச்சை நிற மாணிக்க கற்கள் இருந்துள்ளன.

இவை அனைத்தும் இவர்களது வீட்டிற்கு அருசில் வசித்து வந்த பக்கத்துவீட்டு நபருடையது என தெரியவந்தது, 2011 ஆம் ஆண்டு பக்கத்துவீட்டில் வசித்தவர்களின் பொருட்கள் காணாமல் போனபோது, அவர்கள் புகார் அளித்திருந்தனர்.

அவை அனைத்தும் மேத்திவ்க்கு தெரியும். இதையடுத்து அனைத்தையும் பொலிசாரின் அனுமதியோடு உரிமையாளரிடம் கொடுத்துள்ளனர். தம்பதியினருக்கு நன்றி தெரிவித்த உரிமையாளர், சன்மானம் வழங்க முன்வந்தும் மேத்திவ் அதனை ஏற்க மறுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்