காதலுக்கு எதிர்ப்பு: ஆத்திரத்தில் இளைஞரின் கண்களை தோண்டி எடுத்த குடும்பத்தினர்! பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் இளைஞர் ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர், அவரது கண்களை ஸ்பூனால் தோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலோசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் அப்துல் பகி (22), இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு கோபமடைந்த பகியின் அப்பா தோஸ்ட் முகமது (70) மற்றும் சகோதர்களான அப்துல் கியானி, அப்துல் சட்டார், அப்துல் ரகுமான் மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் பகியை தனி அறைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

பின்னர் ஈவு இரக்கமின்றி ஸ்பூனை வைத்து அவரின் இரண்டு கண்களையும் தோண்டி எடுத்துள்ளனர்.

வீடியோவை காண

வலியால் துடித்த பகி தன்னை கொன்றுவிடுமாறு கெஞ்ச, அதற்கு உனக்கு தரப்பட்ட தண்டனை இந்த ஊரில் உள்ள மற்றவர்களுக்கு பாடம் என ஐந்து பேரும் கூறியுள்ளனர்.

பகியின் அலறல் சத்தம் கேட்டு அவரின் மற்றொரு சகோதரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பகிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

பகியை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற சகோதரர் அப்துல் கபர் கூறுகையில், சம்பவம் நடந்த போது நான் வீட்டில் இல்லை, அக்கம்பக்கத்தினர் பகியின் அலறல் சத்தம் கேட்டு எனக்கு போன் செய்த பின்னரே வீட்டுக்கு வந்தேன்.

அவரை மருத்துவமனையில் சேர்க்க எங்களிடம் பணமில்லாத நிலையில் அக்கம்பக்கத்தினர் 35000 பணம் கொடுத்து உதவினார்கள் என கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குபதிவு செய்துள்ள நிலையில் பகியின் அப்பா மற்றும் இரு சகோதர்களை கைது செய்துள்ளனர், மற்ற இருவரையும் தேடி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers