மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் இன்ப சுற்றுலா: விமான நிலையத்தில் கெஞ்சிய கணவன்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொலம்பியாவில் இன்னொரு பெண்ணுடன் இன்ப சுற்றுலா செல்ல திட்டமிருந்த கணவனை, அவரின் மனைவி விமானநிலையத்தில் கையும் களவுமாக பிடித்துள்ளார்.

கொலாம்பியாவின் José María Córdova சர்வதேச விமான நிலையத்தில், ஒரு தம்பதியினர் Cartagena-விக்கு இன்பச் சுற்றுலா செல்வதற்காக சென்றுள்ளனர்.

அப்போது திடீரென வந்த பெண் ஒருவர், தம்பதியினராக நின்று கொண்டிருந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளார்.

அப்போது அவருடன் இருந்த நபர் தடுக்க முயற்சி செய்ய, சனிக்கிழமையன்று நான் இன்று இவளா என்று கடும் ஆத்திரத்துடன் சண்டை போட்டுள்ளார்.

ஏனெனில் சண்டை போட்ட பெண் தான் அவரின் மனைவி, உன்னை சிறையில் அடைக்காமல் விடமாட்டேன் என்று தொடர்ந்து முடியை பிடித்து இழுத்து சண்டைபோட்டுள்ளார்.

கணவர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் விடுவதாக தெரியவில்லை, இந்த வீடியோ வேறொரு பயணி எடுத்து வெளியிட வைரலாகியுள்ளது.

விமானநிலையத்தில் நடந்த இப்பிரச்சனையால் பொலிசார் வந்தனரா? அதிகாரிகள் யாரும் தலையிட்டார்களா? என்பது குறித்து தெரியவரவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers